உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக.
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - அதி
உன்னத ஜீவனே வருக.
எட்டி உதைத்து நீங்கள் பேசும்
இதயத்தின் மொழியைக் கேட்டோம் - உம்
கருணையை அதிலே பார்த்தோம் - உம்
கருணையை அதிலே பார்த்தோம்.
கொலைவெறியோடு நீங்கள் தாக்கும்
அமைதியின் மொழியைக் கண்டு -நாங்கள்
அதிர்ந்து போனோம் இன்று.
இப்படிப் பட்ட உங்களை எல்லாம்
ஏற்றி வைத்த மக்களை எண்ணி
வருந்துவ தன்றி வேறு,
வழிதான் இங்கு ஏது..!
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக - உம்
அன்பை வாரித் தருக.
முற்போக் கானவர் தமிழர் என்று
முளங்கிய காலம் போச்சு - இன்று
தற்குறி கையில் ஆட்சி. - இன்று
தற்குறி கையில் ஆட்சி.
அவையோர் நடவே அடியாள் போல
பேசுதல் அன்பின் மொழியா - உன்
மிரட்டல் அன்பின் மொழியா..?
மதத்தை இழுத்து அரசியல் செய்வதில்
சங்கியை மிஞ்சி விட்டாய் - நீ
சாதனை படைத்து விட்டாய்.
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக - உம்
அன்பை வாரித் தருக.
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக.
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - அதி
உன்னத ஜீவனே வருக.
எட்டி உதைத்து நீங்கள் பேசும்
இதயத்தின் மொழியைக் கேட்டோம் - உம்
கருணையை அதிலே பார்த்தோம் - உம்
கருணையை அதிலே பார்த்தோம்.
கொலைவெறியோடு நீங்கள் தாக்கும்
அமைதியின் மொழியைக் கண்டு -நாங்கள்
அதிர்ந்து போனோம் இன்று.
இப்படிப் பட்ட உங்களை எல்லாம்
ஏற்றி வைத்த மக்களை எண்ணி
வருந்துவ தன்றி வேறு,
வழிதான் இங்கு ஏது..!
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக - உம்
அன்பை வாரித் தருக.
முற்போக் கானவர் தமிழர் என்று
முளங்கிய காலம் போச்சு - இன்று
தற்குறி கையில் ஆட்சி. - இன்று
தற்குறி கையில் ஆட்சி.
அவையோர் நடவே அடியாள் போல
பேசுதல் அன்பின் மொழியா - உன்
மிரட்டல் அன்பின் மொழியா..?
மதத்தை இழுத்து அரசியல் செய்வதில்
சங்கியை மிஞ்சி விட்டாய் - நீ
சாதனை படைத்து விட்டாய்.
உருட்டுக் கட்டையைக் கொண்டு
அன்பின் மொழியில் பேசும்
உன்னத ஜீவனே வருக - உம்
அன்பை வாரித் தருக - உம்
அன்பை வாரித் தருக.
Tags:
General