கொந்தளிக்கும் கடலோ..!

கொந்தளிக்கும் கடலோ.‌.!
கொதிக்கும் இந்த உடலோ..!
எந்திரிக்கும் அலைகள்,
கட் டுடையும் கரைகள்.

மூச்சிலே பரவும் வெப்பம்
உதட்டிலே அழுத்தும் முத்தம்
மெல்லிய இசையை மீட்டுது - நிலமை
எல்லை மீறி தாக்குது

உடைந்த இரு துண்டுகள் ஒன்றாய்
பொருந்துகின்ற வேளை…
இடைவேளை ஏதும் இன்றி
தொடரட்டும் லீலை.
அடை மழை சிந்தும் போது
நனையாத பூக்கள் ஏது..?
நெருப்புக்கு நடுவே வைத்தால்
உருகாத மெழுகும் ஏது…?
விரல்களை விரல்கள் பற்ற
விழிகளை விழிகள் பற்ற
கடந்தது அந்த இரவு - நமக்கு
சாட்சியாய் ஒற்றை நிலவு.

கொந்தளிக்கும் கடலோ.‌.!
கொதிக்கும் இந்த உடலோ..!
எந்திரிக்கும் அலைகள்,
கட்டுடையும் கரைகள்.

படையெடுத்து வந்தார் போல
பாவை அவள் தோற்றம்..!
பார்த்தவுடன் நெஞ்சுக்குள்ளே
பல்வேறு மாற்றம்…
வியர்வையின் வாசம் காதல்
வெறியினை மெல்ல ஏற்றும்
உயிர் வரை சென்று அவளின்
முனகலோ என்னை வாட்டும்
முடிவிலா பயணம் இங்கே
முடிவிலா பயணம் இங்கே
இதுவரை காணவில்லை - அந்த
இன்பத்தின் இறுதி எல்லை

கொந்தளிக்கும் கடலோ.‌.!
கொதிக்கும் இந்த உடலோ..!
எந்திரிக்கும் அலைகள்,
கட்டுடையும் கரைகள்.

மூச்சிலே பரவும் வெப்பம்
உதட்டிலே அழுத்தும் முத்தம்
மெல்லிய இசையை மீட்டுது - நிலமை
எல்லை மீறி தாக்குது.





Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form