புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - ஆம்
கண்ணீர் இருக்கிறது - அந்தக்
கண்ணீரில் தான் சொல்லப்படாத
உண்மைகள் இருக்கிறது - தூய
உண்மைகள் இருக்கிறது...!
பூக்களை வாங்க வருகிற கூட்டம்
முட்களை வாங்க வருவதில்லை
முட்களுக் கிங்கே மதிப்பில்லை என்று
செடிகள் அவற்றை வெறுப்பதில்லை - அதை
வெளிக்காட் டாமல் மறைப்பதில்லை..
வலியோ சுகமோ இரண்டும் ஒன்றென
புத்திக்கு நன்றாய் தெரிகிறது
வலியை வெளியே காட்டிக் கொண்டால்
கூடுதலாக எரிகிறது - நெஞ்சம்
கூடுதலாக எரிகிறது...
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்
அறிவுரை என்கிற பெயரில் சிலபேர்
எரிவதில் எண்ணை ஊற்றுகிறார்
ஆறுதல் தானே கேட்டேன் எதற்கு
அணுகுண் டுகளை வீசுகிறார். - நெஞ்சில்
அணுகுண் டுகளை வீசுகிறார்.
எந்தன் துயரம் அவர்களுக் கிங்கே
வேடிக்கையாக இருக்கிறது
என்பதை இதயம் உணர்ந்தபின் னாலே
வெளிக்காட் டாமல் மறைக்கிறது - துயரை
வெளிக்காட் டாமல் மறைக்கிறது..!
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்.
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - ஆம்
கண்ணீர் இருக்கிறது - அந்தக்
கண்ணீரில் தான் சொல்லப்படாத
உண்மைகள் இருக்கிறது - தூய
உண்மைகள் இருக்கிறது...!
பூக்களை வாங்க வருகிற கூட்டம்
முட்களை வாங்க வருவதில்லை
முட்களுக் கிங்கே மதிப்பில்லை என்று
செடிகள் அவற்றை வெறுப்பதில்லை - அதை
வெளிக்காட் டாமல் மறைப்பதில்லை..
வலியோ சுகமோ இரண்டும் ஒன்றென
புத்திக்கு நன்றாய் தெரிகிறது
வலியை வெளியே காட்டிக் கொண்டால்
கூடுதலாக எரிகிறது - நெஞ்சம்
கூடுதலாக எரிகிறது...
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்
அறிவுரை என்கிற பெயரில் சிலபேர்
எரிவதில் எண்ணை ஊற்றுகிறார்
ஆறுதல் தானே கேட்டேன் எதற்கு
அணுகுண் டுகளை வீசுகிறார். - நெஞ்சில்
அணுகுண் டுகளை வீசுகிறார்.
எந்தன் துயரம் அவர்களுக் கிங்கே
வேடிக்கையாக இருக்கிறது
என்பதை இதயம் உணர்ந்தபின் னாலே
வெளிக்காட் டாமல் மறைக்கிறது - துயரை
வெளிக்காட் டாமல் மறைக்கிறது..!
புன்னகை என்ற திரைக்குப் பின்னால்
கண்ணீர் இருக்கிறது - அதில் தான்
உண்மை இருக்கிறது
உண்மை இங்கே யாருக்கு வேண்டும்
அதனால் சிரிக்கின்றேன் - என்
சுமைகளை மறைக்கின்றேன்.