ஜனநாயகத்தின் சவப்பெட்டி -

ஜனநாயகத்தின் சவப்பெட்டி - இந்த
ஈவிஎம் என்னும் சிறு பெட்டி
வாக்குச் சீட்டில் உயிரோடிருந்த
வாக்குகளெல்லாம் பெட்டிக்குள்
வந்த பின்னாலே முடிந்தது
முடிந்தது
முடிந்தது - ஜன
நாயகம் செத்து மடிந்தது..!
மடிந்தது
(மடி) (மடி) மடிந்தது

யாருக்கு ஓட்டுப் போட்டோம் என்பது
காகித சீட்டில் இருந்தது
தெளிவாய் அதிலே இருந்தது
இருந்தது
இருந்தது

ஈவிஎம்மில் தெரிவது எங்கே
பதிவான தென்று யாருக்குத் தெரியும்
யாருக்கு விழுந்தது யாருக்குத் தெரியும்
ஒன்றைத் தொட்டால் இரண்டு விழுமென
செட்பண்ணி விட்டால் யாருக்குத் தெரியும்
அது யாருகுத் தெரியும்
யார் யார் யார் யார் யாருகுத் தெரியும்

வீவி பேட்டின் சீட்டை எண்ணி
வாக்குடன் ஒப்பிட மாட்டார்கள் - அதை
வாக்குடன் ஒப்பிட மாட்டார்கள்
ஒப்பிட்டால் தான் மாட்டிக் கொகள்வோம்
என்பதை அவர்கள் அறிவார்கள் - அந்த
உண்மையை அவர்கள் அறிவார்கள்.

ஜனநாயகத்தின் சவப்பெட்டி - இந்த
ஈவிஎம் என்னும் சிறு பெட்டி
வாக்குச் சீட்டில் உயிரோடிருந்த
வாக்குகளெல்லாம் பெட்டிக்குள்
வந்த பின்னாலே முடிந்தது
முடிந்தது
முடிந்தது - ஜன
நாயகம் செத்து மடிந்தது..!
மடிந்தது
(மடி) (மடி) மடிந்தது

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form