ஒட்டுமொத்த கூட்டத்திலே..!

ஒட்டுமொத்த கூட்டத்திலே..!
ஒருத்தி மட்டும் நோட்டத்திலே ..!
பாக்குறாளே பாக்குறாளே..!
என்ன மட்டும் பாக்குறாளே ..!
வச்ச கண்ணு வாங்காம
குறி வச்சு தாக்குறாளே...!

ஒட்டுமொத்த கூட்டத்திலே..!
ஒருத்தி மட்டும் நோட்டத்திலே - அவ
ஒருத்தி மட்டும் நோட்டத்திலே..!

பாவாடை தாவணியும்,
டாலடிக்கும் காதணியிம்,
தூரத்துல நின்னாலும்
தூக்குதடி என்ன...
புயல்காத்தில் மரம்போல
சாய்க்குதடி என்ன...!
வேரோட உன்பக்கம்
சாய்க்குதடி என்ன..!
சாமி பார்க்க வந்தவன
சாமியாட வைக்கிறியே..!
ராட்டினம் போல் ஒன்னச் சுத்தி
வட்டம் போட வைக்கிறியே..!

ஒட்டுமொத்த கூட்டத்திலே..!
ஒருத்தி மட்டும் நோட்டத்திலே ..!
பாக்குறாளே பாக்குறாளே..!
என்ன மட்டும் பாக்குறாளே ..!
வச்ச கண்ணு வாங்காம
குறி வச்சு தாக்குறாளே...! - என்ன
குறி வச்சு தாக்குறாளே...!

மல்லிகப்பூ வாசனையும்,
கால் கொலுசு ஓசைகளும்,
யாருக்கும் தெரியாமல்
என்ன மட்டும் கூப்பிடுது...
ஏங்க வைக்கும் உன்பார்வை
எம்மனச சாப்பிடுது...
சீரியல் செட்டெல்லாம்
உன் முகத்தைப் பார்த்த பின்னே
ஃபீசாகிப் போனதடி - கண்ணே
ஃபீசாகிப் போனதடி.
கலங்காத எம்மனசு
கட்டழகை பாத்த பின்னே
லூசாகி போனதடி - உன்மேல்
லூசாகி போனதடி.

ஒட்டுமொத்த கூட்டத்திலே..!
ஒருத்தி மட்டும் நோட்டத்திலே ..!
பாக்குறாளே பாக்குறாளே..!
என்ன மட்டும் பாக்குறாளே ..!
வச்ச கண்ணு வாங்காம
குறி வச்சு தாக்குறாளே...! - என்ன
குறி வச்சு தாக்குறாளே...!




Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form