காங்கிரஸ் பாஜக இரண்டு பேரும் ஒன்று

காங்கிரசு பாஜாக்கா ரெண்டு பேரும் ஒண்ணு - இத
அறியாத மக்களோட வாயிலதான் மண்ணு…
ஆர்எஸ்எஸின் ரெட்டைக் குழல்
துப்பாக்கி இவங்க.
ஒண்ணு சேர்ந்து இந்தியாவ
ஒழிக்கப் போறான் பொறுங்க…. - நம்மள
ஒழிக்கப் போறான் பொறுங்க…

காங்கிரசு பாஜாக்கா ரெண்டு பேரும் ஒண்ணு - இத
அறியாத மக்களோட வாயிலதான் மண்ணு - ஆமா
வாயிலதான் மண்ணு…

கூட்டுச்சேர்ந்து கெடுப்பதிலே ரெண்டுபேரும் கில்லி,
ரீஜினலு பார்ட்டிகள ஒடச்சுறுவான் சல்லி…
முற்போக்கா பேசி நம்மக்கு அல்வா கிண்டி கொடுப்பான் - பப்பு
அல்வா கிண்டி கொடுப்பான்.
பிற்போக்கு வாதத்த சட்டம் போட்டு திணிப்பான் - சங்கி
சட்டம் போட்டு திணிப்பான்.
ஒண்ணு சேர்ந்து ரெண்டு பேரும்
பிராந்தியத்த ஒழிப்பான் - ரீஜினல்
பார்ட்டிகள கலைப்பான்…

காங்கிரசு பாஜாக்கா ரெண்டு பேரும் ஒண்ணு - இத
அறியாத மக்களோட வாயிலதான் மண்ணு - ஆமா
வாயிலதான் மண்ணு…

பீகாரில் இப்படித்தான் காங்கிரசு கெடுத்தான் - அங்க
ஆர்ஜேடிய கெடுத்தான்
பின்னாலே தமிழ்நாட்டில் கொதவளைய நெரிச்சான்
ஸ்டாலின் கொதவளைய நெரிச்சான்
இப்போது பெங்காலில் நடக்குறத பாறு
திருணாமுல் காங்கிரச ஒடைக்கிறது யாரு..?
எதிரிகள ஒழிச்சிக் கட்டும் பாஜாக்காவும் ஒண்ணு..
கூட இருந்து குழிபறிக்கும் காங்கிரசும் ஒண்ணு…
இப்பவாது முழிச்சிக் கிட்டு ஒண்ணு சேந்து நில்லு…
ரீஜினலு பார்ட்டி எல்லாம் ஒண்ணு சேந்து நில்லு… - ஒடனே
ஒண்ணு சேர்ந்து நில்லு….



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form