நான் எவ்வளவு பெரிய கோழை..!

நான் எவ்வளவு பெரிய கோழை
கொண்ட காதலைச் சொல்லவும் கூட
தைரியமில்லாத கோழை - வாயில்
வார்த்தைகளில்லாத ஏழை…

நான் எவ்வளவு பெரிய கோழை
கொண்ட காதலைச் சொல்லவும் கூட
தைரியமில்லாத கோழை..!

எப்படி உன்னிடம் சொல்வதென்று
நித்தமும் பலமுறை எண்ணுகிறேன்
நெருங்கி அருகில் வந்த பின்பு
சொல்ல முடியாமல் மெல்லுகிறேன்..!
எனக்குள் என்னை கொல்லுகிறேன்..!
உன்னைப் பார்த்தபின் நெஞ்சுக்குள்
ஏதோ ஒரு வகை படபடப்பு
உள்ளத்துக்குள் துடிதுடிப்பு
சொல்ல வந்ததை விட்டுவிட்டு
கண்டதை எல்லாம் பேசுகிறேன்..!
காதலை கசக்கி வீசுகிறேன்..! - என்
காதலை கசக்கி வீசுகிறேன்..!

நான் எவ்வளவு பெரிய கோழை
கொண்ட காதலைச் சொல்லவும் கூட
தைரிய‌மில்லாத கோழை - வாயில்
வார்த்தைகளில்லாத ஏழை…

காதல் என்றால் என்னவென்று
கதை கதையாக பேசுவேன் - பல
கவிதைகள் அள்ளி வீசுவேன்
அடுத்தவரோடு பேசும் போது
பேச்சை நிறுத்தத் தெரியாது..!
உந்தன் எதிரில் வந்துநின்றாலோ
பேச்சை தொடங்க தெரியாது..!
பேச்சை தொடங்க தெரியாது..!
உந்தன் கண்களைப் பார்த்த உடன்
உள்ளே இருந்த வார்த்தையெல்லாம்
எங்கோ பறந்து போகிறது..!
எல்லாம் மறந்து போகிறது..!

நான் எவ்வளவு பெரிய கோழை
கொண்ட காதலைச் சொல்லவும் கூட
தைரியமில்லாத கோழை - வாயில்
வார்த்தைக‌ளில்லாத ஏழை…
நான் எவ்வளவு பெரிய கோழை

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form