அப்பாவ காணோம்..!

அப்பாவ காணோம்..! - எங்க
அப்பாவ காணோம்..!
அம்மாவ கோர்ட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கிருக்காரோ தெரியல - இப்ப
எங்கிருக்காரோ தெரியல..!

அப்பாவ காணோம்..! - எங்க
அப்பாவ காணோம்..!
அம்மாவ கோர்ட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…

கண்டவளோடு சுற்றுவதாக,
பர்த்டே கேக்கு வெட்டுவதாக,
பார்த்தவர் சிலபேர் சொல்றாங்க..!
உயிரோட எங்கள கொல்றாங்க..!
அன்னவள் வீட்டு நாய்க்குட்டியை
அன்போடு எடுத்து கொஞ்சுவார் - அந்த
நாய்க்கு உள்ள அதிர்ஷ்டம் கூட
எங்களுக் கில்லை மக்களே..! - ஆம்
எங்களுக் கில்லை மக்களே..!

அப்பாவ காணோம்..! - எங்க
அப்பாவ காணோம்..!
அம்மாவ கோர்ட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…

வெட்டிக் கதைகள் பேசுவார் - பல
வீர வசனங்கள் வீசுவார்
ஒழுக்கம் வேண்டும் என்பதை
ஊருக்கு உபதேசம் கூறுவார்
சொந்த வாழ்வில் நேர்மையை
இடது கையால் தள்ளுவார் - தன்
இடது கையால் தள்ளுவார்
அந்த வெத்து வேட்டை கண்டால் - கொஞ்சம்
வீட்டுக் கனுப்பி வையுங்க..! - எங்க
வீட்டுக் கனுப்பி வையுங்க..!

அப்பாவ காணோம்..! - எங்க
அப்பாவ காணோம்..!
அம்மாவ கோர்ட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…

எங்கள் தாயோ துடிக்கிறார்..!
ஏங்கி கண்ணீர் வடிக்கிறார்
ஆறுதல் தரவேண்டிய தந்தையோ
அடுத்தவளோடு இருக்கிறார்..! - குடும்பத்தை
கெடுத்தவளோடு இருக்கிறார்..!
எங்கள் தாய்க்கு வீட்டுக்குள்
இடமில்லை என்று சொல்கிறார் - அப்பா
இடமில்லை என்று சொல்கிறார்..!
எங்களைத் தெருவில் நிறுத்திவிட்டு
கண்டவளோடு செல்கிறார் - உறவைக்
கொன்றவளோடு செல்கிறார்..!

அப்பாவ காணோம்..! - எங்க
அப்பாவ காணோம்..!
அம்மாவ கோர்ட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…
எங்கள ரோட்டுல விட்டுட்டு போனவர்…

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form