ஒரு நாள் வரும். .. ஒரு பொழுது வரும்...

ஒரு நாள் வரும். ..
ஒரு பொழுது வரும்...
எல்லாம் நொடியில் முடிந்து விடும்..!
இன்பமும் ஒரு நாள் முடிந்து விடும் ..!
துன்பமும் ஒரு நாள் முடிந்து விடும்
இன்பம் துன்பம் இரண்டு மற்ற
அமைதியும் ஒரு நாள் வடிந்து விடும்..!

ஒரு நாள் வரும்....
ஒரு பொழுது வரும்...
எல்லாம் நொடியில் முடிந்து விடும்..!

பள்ளிப் படிப்பு இப்படித்தான்,
திடீரென ஒரு நாள் முடிந்தது.
கல்லூரி வாழ்க்கை இப்படித்தான்,
கண பொழுதுக்குள் மறைந்தது.
தாயும் தகப்பனும் இப்படித்தான்,
வாழ்க்கையில் இருந்து மறைந்தனர்.
நெருங்கிய உறவுகள் இப்படித்தான்,
நெருக்கம் விலகித் தொலைந்தனர்.
தொலைந்தவை எதுவும் மீளவில்லை..!
வாழ்க்கை பயணம் தீரவில்லை..!

ஒரு நாள் வரும். ..
ஒரு பொழுது வரும்...
எல்லாம் நொடியில் முடிந்து விடும்..!
இன்பமும் ஒரு நாள் முடிந்து விடும் ..!
துன்பமும் ஒரு நாள் முடிந்து விடும்
இன்பம் துன்பம் இரண்டு மற்ற
அமைதியும் ஒரு நாள் வடிந்து விடும்..!

காதல் வாழ்க்கை முடிந்த இடத்தில் ,
கல்யாண வாழ்க்கை தொடங்கியது...!
பிள்ளை குட்டி வேலை என்று
மொத்த நேரமும் முடங்கியது..!
பொறுப்பற்ற வாழ்க்கை முடிந்த இடத்தில்,
பொறுப்புகள் தலைமேல் ஏறியது.!
கவலைக ளில்லா வாழ்வின் முடிவில்
கனமாய் இதயம் மாறியது…
குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி தேடி
நாளும் பொழுதும் ஓடியது....
இயந்திரத்துக்குள் இயந்திர மாக
இன்பத்தை இதயம் தேடியது…
தேடிய எதுவும் கிடைக்கவில்லை
சாதனை எதுவும் படைக்கவில்லை

ஒரு நாள் வரும். ..
ஒரு பொழுது வரும்...
எல்லாம் நொடியில் முடிந்து விடும்..!
இன்பமும் ஒரு நாள் முடிந்து விடும் ..!
துன்பமும் ஒரு நாள் முடிந்து விடும்
இன்பம் துன்பம் இரண்டு மற்ற
அமைதியும் ஒரு நாள் வடிந்து விடும்..!






Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form