என்னைத் தொட்டு போன தென்றல்
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!
பாதுகாத்து வைத்த நெஞ்சை
பறிகொடுத்தேன் பெண்ணே..!
தனிமையிலே உன்னை எண்ணி
தவிக்கின்றேன் கண்ணே... - நான்
தவிக்கின்றேன் கண்ணே..!
காதலென்றால் என்ன வென்று
அறியாமல் இருந்தேன். - உனை
கண்டவுடன் கணப்பொழுதில்
காதலிலே விழுந்தேன்.
நேற்றுவரை யாரென்றே
அறியாத உன்னை;
இன்றுமுதல் உயிரெனவே
மதிக்கின்றேன் பெண்ணே..!
நாளைவரும் காலமெலாம்
சேர்ந்திருக்க வேண்டும்.
நல்லதொரு ஜோடிஎன்று
வாழ்ந்திருக்க வேண்டும்.
என்னைத் தொட்டு போன தென்றல்
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!
தட்டச்சு முடித்துவரும்
தேவதையைக் காண.
தாகமுடன் காத்திருப்பேன்
தளிர்மேனி நாண.
போதை தரும் பார்வைகளால்
புதுக்கவிதை படிப்பாய்.
மோக ரசம் சிந்திவிழ
மெதுவாகச் சிரிப்பாய்.
இதுபோதும் நூராண்டு
நான்வாழக் கூடும்...
இதயத்தில் குயிலொன்று
இதமாகப் பாடும்..!
என்னைத் தொட்டு போன தென்றல்
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!
பாதுகாத்து வைத்த நெஞ்சை
பறிகொடுத்தேன் பெண்ணே..!
தனிமையிலே உன்னை எண்ணி
தவிக்கின்றேன் கண்ணே... - நான்
தவிக்கின்றேன் கண்ணே..!
காதலென்றால் என்ன வென்று
அறியாமல் இருந்தேன். - உனை
கண்டவுடன் கணப்பொழுதில்
காதலிலே விழுந்தேன்.
நேற்றுவரை யாரென்றே
அறியாத உன்னை;
இன்றுமுதல் உயிரெனவே
மதிக்கின்றேன் பெண்ணே..!
நாளைவரும் காலமெலாம்
சேர்ந்திருக்க வேண்டும்.
நல்லதொரு ஜோடிஎன்று
வாழ்ந்திருக்க வேண்டும்.
என்னைத் தொட்டு போன தென்றல்
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!
தட்டச்சு முடித்துவரும்
தேவதையைக் காண.
தாகமுடன் காத்திருப்பேன்
தளிர்மேனி நாண.
போதை தரும் பார்வைகளால்
புதுக்கவிதை படிப்பாய்.
மோக ரசம் சிந்திவிழ
மெதுவாகச் சிரிப்பாய்.
இதுபோதும் நூராண்டு
நான்வாழக் கூடும்...
இதயத்தில் குயிலொன்று
இதமாகப் பாடும்..!
என்னைத் தொட்டு போன தென்றல்
நீயா அடி நீயா..!
நெஞ்சுக்குள்ளே பற்றிக் கொண்ட
தீயா சுகத் தீயா..!