எழுந்து வா..! எதிர்த்து வா...!

எழுந்து வா...
எதிர்த்து வா...
எதற்கும் தளர்ந்து விடாதே..!

தடை வந்தால் அதை
உடைத்து போடு,
தயங்கி நின்று விடாதே..! - நண்பா
தயங்கி நின்று விடாதே..!

எழுந்து வா...
எதிர்த்து வா...
எதற்கும் தளர்ந்து விடாதே..! - நீ
எதற்கும் தளர்ந்து விடாதே..!

எழுந்து நிற்பதே வீழும் ஆனால்
வீழ்ந்தது மீண்டும் வீழாது..! - ஆம்
வீழ்ந்தது மீண்டும் வீழாது..!
வீழ்ந்து கிடப்பதே எழுவதற்கான
வாய்ப்பெனக் கருதி முன்னேறு. - நல்
வாய்ப்பெனக் கருதி முன்னேறு.
எழுவது வீழ்வதும், வீழ்ந்தது எழுவதும்,
இயற்கை வகுத்த நியதியடா..! - நீ
துணிவுடன் முயன்றால் இமயமும் கூட
காலடி யில்வரும் உறுதியடா..! - உன்
காலடி யில்வரும் உறுதியடா..!

எழுந்து வா...
எதிர்த்து வா...
எதற்கும் தளர்ந்து விடாதே..!

தடை வந்தால் அதை
உடைத்து போடு,
தயங்கி நின்று விடாதே..! - நண்பா
தயங்கி நின்று விடாதே..!

சோதனை மேலே சோதனை வந்தால்
சுகமாய் நீயும் கருதிக்கொள். - அதை
சுகமாய் நீயும் கருதிக்கொள்.
தடைகளை வென்று சாதனை படைக்க
உனக்குள் நீயே உறுதி கொள்..! - ஆம்
உனக்குள் நீயே உறுதி கொள்..!
விலகிச் சென்ற வெற்றிக ளெல்லாம்
விரும்பி உன்னைத் தேடிவரும்... - அவை
விரும்பி உன்னைத் தேடிவரும்...
இன்றை நினைத்து வருந்தாதே - பல
இன்பச் செய்திகள் நாளைவரும்..! - பல
இன்பச் செய்திகள் நாளைவரும்..!

எழுந்து வா...
எதிர்த்து வா...
எதற்கும் தளர்ந்து விடாதே..!

தடை வந்தால் அதை
உடைத்து போடு,
தயங்கி நின்று விடாதே..! - நண்பா
தயங்கி நின்று விடாதே..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form