என்னை நானே கட்டி வைக்கிறேன்..!

என்னை நானே கட்டி வைக்கிறேன்... - என்
ஆசையை எனக்குள் பொத்தி வைக்கிறேன்...
ஆனாலும் என்னால் முடியவில்லை - நீ
இல்லாத இரவுகள் விடியவில்லை..!

என்னை நானே கட்டி வைக்கிறேன். - என்
ஆசையை எனக்குள் பொத்தி வைக்கிறேன்..!

அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டாய். - என்
அச்சம் நாணம் களைந்து விட்டாய்.
உன்னை நினைத்து உருக விட்டாய். - எனை
ஒவ்வொரு நொடியும் மறுகவிட்டாய் .
பொங்கும் கடலை பூட்டி வைக்க,
பூட்டுகள் என்னிடம் இல்லையடா...
எங்கும் உன் முகம் தெரிகிறது,
இதுதான் மாபெரும் தொல்லையடா...

என்னை நானே கட்டி வைக்கிறேன்... - என்
ஆசையை எனக்குள் பொத்தி வைக்கிறேன்...
ஆனாலும் என்னால் முடியவில்லை - நீ
இல்லாத இரவுகள் விடியவில்லை..!

கையைப் பிடித்த கதகதப்பு, - என்
உள்ளங் கையில் இருக்கிறது.
உதட்டில் வாங்கிய முத்தங்கள்
ஒவ்வொரு கணமும் இனிக்கிறது...!
மடியில் சரிந்து தலைகோதி
மணிக்கணக்காக பேசியது,
இன்றும் காதில் ஒலிக்கிறது; - என்
இதயம் லேசாய் வலிக்கிறது..!

என்னை நானே கட்டி வைக்கிறேன்.. - என்
ஆசையை எனக்குள் பொத்தி வைக்கிறேன்..
ஆனாலும் என்னால் முடியவில்லை - நீ
இல்லாத இரவுகள் விடியவில்லை..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form