காலமென்னும் கடலிலே..!

காலமென்னும் கடலிலே..!
ஓடம் போல போகிறேன்;
காற்று எந்த திசையிலோ,
நானும் அந்த திசையிலே..!

காலமென்னும் கடலிலே
ஓடம் போல போகிறேன்..! - நான்
ஓடம் போல போகிறேன் ..!

நதியில் விழுந்த இலையிது,
நகர மறுத்துக் கிடக்கலாம்.
நதியும் இந்த இலையினை,
நகர்த்திக் கொண்டே கடக்குது. - அது
நகர்த்திக் கொண்டே கடக்குது.
மரங்கள் வீழ்ந்து உரமாகும்.
உரங்கள் மீண்டும் மரமாகும்.
இதுதான் இயற்கை விதியடா..!
இதைநீ கொஞ்சம் மதியடா..!
இதைநீ கொஞ்சம் மதியடா..!

காலமென்னும் கடலிலே,
ஓடம் போலே போகிறேன்;
காற்று எந்த திசையிலோ,
நானும் அந்த திசையிலே..!

திட்டமிட்ட வாழ்க்கையோ,
திசைமாறிப் போகலாம்..!
கட்டிவைத்த கோட்டைகள்,
கட்டுடைந்து போகலாம்..!
காலம் தந்த வேலையை,
கச்சிதமாய் செய்யுவோம்..!
நாளை என்ன நேருமோ,
நடக்கட்டும் பார்க்கலாம்..!

காலமென்னும் கடலிலே,
ஓடம் போல போகிறேன்..!
காற்று எந்த திசையிலோ,
நானும் அந்த திசையிலே..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form