கனத்த இதயம் இறக்கிவை...!
அடுத்த அடியை எடுத்துவை...!
நடப்பது ஏதும் நடக்கட்டும்.
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் - நெஞ்சில்
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும்..!
கனத்த இதயம் இறக்கிவை...!
அடுத்த அடியை எடுத்துவை - உன்
அடுத்த அடியை எடுத்துவை...!
சோர்ந்து ஒடுங்கிப் போவதனால்
சோகம் விட்டுப் விலகாது..!
தொடந்து எழுந்து நடந்துவிட்டால்
துன்பம் உன்னைத் தொடராது..! - ஆம்
துன்பம் உன்னைத் தொடராது..!
எரும்பும் கூட வாழ்கிறது - சிறு
ஈயும் கூட வாழ்கிறது
அதைவிட வாநீ குறைந்துவிட்டாய் - உன்
அருமையை நீஏன் மறந்துவிட்டாய்..? - உன்
அருமையை நீஏன் மறந்துவிட்டாய்..?
கனத்த இதயம் இறக்கிவை
அடுத்த அடியை எடுத்துவை
நடப்பது ஏதும் நடக்கட்டும்
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் - நெஞ்சில்
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும்..!
மலையில் மோதும் நதியோ பின்பு
சமவெளிப் பரப்பை வந்தடையும்.
சவால்கள் நிறைந்த வாழ்வும் ஒருநாள்
சமநிலை பெற்று உய்வடையும்.
பொருமையும் தெளிவும் இருந்தால் போதும்
முதுமையில் கூட வெற்றிவரும்.
பொறுமையற்றவன் வாழ்வோ இங்கே
முளைக்கும் போதே பட்டுவிடும். - ஆம்
முளைக்கும் போதே பட்டுவிடும்.
கனத்த இதயம் இறக்கிவை...!
அடுத்த அடியை எடுத்துவை...!
நடப்பது ஏதும் நடக்கட்டும்.
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும் - நெஞ்சில்
நம்பிக்கை மட்டும் இருக்கட்டும்..!