காதலனே..! என் காதலனே..!

காதலனே..!
என் காதலனே..!!
கனவுகள் பலபல தந்தவனே
ரகசியமாக வந்தவனே - என்
ராத்திரி தூக்கம் கொன்றவனே...!
என்றெனை நீயும் கரம் பிடிப்பாய்..?
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய் - உன்
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய்..!

காதலனே..!
என் காதலனே..!!
கனவுகள் பலபல தந்தவனே
ரகசியமாக வந்தவனே - எனக்குள்
ரகசியமாக வந்தவனே..!

முடிவற்ற காதலை நீ கொடுத்தாய்
விடிவெற்ற இரவுகள் நீ கொடுத்தாய்
சந்தித்த நாட்களை மறுபடியும்
சிந்தித்து வாழ்கிற வலி கொடுத்தாய்
காற்றில் கலையும் முடி அழகு - அதை
கையால் கோதும் விதமழகு..!
ஆற்றல் மிகுந்த பேரழகு - உன்
அணைப்பை வேண்டும் பெண்ணழகு..!

காதலனே..!
என் காதலனே..!!
கனவுகள் பலபல தந்தவனே
ரகசியமாக வந்தவனே - என்
ராத்திரி தூக்கம் கொன்றவனே...!
என்றெனை நீயும் கரம் பிடிப்பாய்..?
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய் - உன்
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய்..!

எல்லாப் பொழுதும் உன்னுடனே
இருக்கிற காலம் வரவேண்டும்
வில்லாய் நீயும் வளைத்தென்னை
வித்தைகள் புரியும் நிலை வேண்டும்
கல்லாய் கிடக்கும் வாழ்க்கையினை
காட்டா றாக மாற்றுகிற
ஆற்றல் படைத்த ஆண்மகனே - என்
அருமைத் தாய்க்கு மருமகனே..!
எப்போது வந்தெனை அள்ளுவாய்..?
ஆனந்தக் கடலுக்குள் தள்ளுவாய்..? - பேர்
ஆனந்தக் கடலுக்குள் தள்ளுவாய்..?

காதலனே..!
என் காதலனே..!!
கனவுகள் பலபல தந்தவனே
ரகசியமாக வந்தவனே - என்
ராத்திரி தூக்கம் கொன்றவனே...!
என்றெனை நீயும் கரம் பிடிப்பாய்..?
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய் - உன்
இருதயத் துக்குள் சிறை பிடிப்பாய்..?

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form