நீ ஒரு நீங்கா ஓவியம்...
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.
நீ ஒரு நீங்கா ஓவியம் - அன்பே
நீ ஒரு நீங்கா ஓவியம்..!
ஒவ்வொரு கணமும் உன்னுடன் - என்
ஒவ்வொரு கணமும் உன்னுடன்
நினைவில் நீயோ என்னுடன் - தினம்
நினைவில் நீயோ என்னுடன்..!
வாழ்வது உனக்குத் தெரியுமா - என்
வாலிப வேதனை புரியுமா..?
தனிமையில் நானும் இருந்ததில்லை - உன்
நினைவை ஒருகணம் மறந்ததில்லை நான்
ஒருகணம் உன்னை மறந்ததில்லை -
எல்லா பொருளிலும் உன்முகம் - என்
இருதயம் முழுவதும் உன்முகம்
இப்பொழு தேசொல் சம்மதம் - என்
உயிரைத் தருவேன் உன்னிடம் - ஆம்
உயிரைத் தருவேன் உன்னிடம்
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.
படபட விழிகள் பார்த்ததும் - நீ
மெல்லிய புன்னகை பூத்ததும்
ஒருசில வார்த்தைகள் சொன்னதும் - பின்
விலகித் தொலைவாய் சென்றதும்
படம் போல் மனதில் உள்ளதடி - நீ
மறுபடி வந்தால் நல்லதடி...!
- அன்பே நீ
மறுபடி வந்தால் நல்லதடி...!
உயிருள்ள வரையில் காத்திருப்பேன் - அந்த
ஒருநொடிக் காகவே காத்திருப்பேன்..!
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.
நீ ஒரு நீங்கா ஓவியம் - அன்பே
நீ ஒரு நீங்கா ஓவியம்..!
ஒவ்வொரு கணமும் உன்னுடன் - என்
ஒவ்வொரு கணமும் உன்னுடன்
நினைவில் நீயோ என்னுடன் - தினம்
நினைவில் நீயோ என்னுடன்..!
வாழ்வது உனக்குத் தெரியுமா - என்
வாலிப வேதனை புரியுமா..?
தனிமையில் நானும் இருந்ததில்லை - உன்
நினைவை ஒருகணம் மறந்ததில்லை நான்
ஒருகணம் உன்னை மறந்ததில்லை -
எல்லா பொருளிலும் உன்முகம் - என்
இருதயம் முழுவதும் உன்முகம்
இப்பொழு தேசொல் சம்மதம் - என்
உயிரைத் தருவேன் உன்னிடம் - ஆம்
உயிரைத் தருவேன் உன்னிடம்
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.
படபட விழிகள் பார்த்ததும் - நீ
மெல்லிய புன்னகை பூத்ததும்
ஒருசில வார்த்தைகள் சொன்னதும் - பின்
விலகித் தொலைவாய் சென்றதும்
படம் போல் மனதில் உள்ளதடி - நீ
மறுபடி வந்தால் நல்லதடி...!
- அன்பே நீ
மறுபடி வந்தால் நல்லதடி...!
உயிருள்ள வரையில் காத்திருப்பேன் - அந்த
ஒருநொடிக் காகவே காத்திருப்பேன்..!
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நீ ஒரு நீங்கா ஓவியம்...
நினைவின் தூரிகை யாலே,
உயிரின் மையினைத் தொட்டு,
மனதின் சுவரில் எழுதிய ஓவியம் - என்
மனதின் சுவரில் எழுதிய ஓவியம்.