சாதனையா சோதனையா நூறு நாளிலே..!

சாதனையா சோதனையா நூறு நாளிலே
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..! - மக்கள்
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..!

சாதனையா சோதனையா நூறு நாளிலே
(இந்த நூறு நாளிலே)
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..! -
(ஆமா நேரம் போதலே..!)

கட்டான கரண்டுக்கு கட்டணத்தை கூட்டுறான்
சொல்லாம கொள்ளாம சொத்து வரி ஏத்துறான்
வாக்குறுதி சொன்னதெல்லாம்
காத்தோட போச்சுடா
சீக்கு வந்த கோழி போல ஆயிடுச்சு ஆட்சிடா
ஆதாரம் கொடுத்தவனை அடிச்சு கொல்லுறான் - போதை
ஆறாக ஓடுறதை மறக்கச் சொல்லுறான்..!
வீடு தேடி மருந்துவந்தது போன ஆட்சியில்
(ஆமா போன ஆட்சியில்)
வீடு தேடி சரக்கு வருது இந்த ஆட்சியில்
(ஆமா இந்த ஆட்சியில்)

சாதனையா சோதனையா நூறு நாளிலே
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..! - மக்கள்
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..!

விவசாய கடன் முழுசா ரத்துஆகல
விவசாயி போராட்டம் இன்னும்ஓயல
நாட்டோட கடன் மட்டும் ஏறிப்போகுது
நாளுக்கு நாள் வாழ்க்கைஇங்கே நாறிப்போகுது
பெண்களுக்கு பேருந்து இலவச முன்னான்
உரிமைத்தொகை மூணுமடங்கு ஏத்துறமுன்னான்.
சொன்னதெல்லாம் காத்தோட பறந்து போச்சுடா - அவன்
வாக்குறுதி அவனுக்கே மறந்து போச்சுடா..!

சாதனையா சோதனையா நூறு நாளிலே
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..! - மக்கள்
வேதனைய சொல்லி அழ நேரம் போதலே..!
(ஆமா நேரம் போதலே..!)

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form