நிலவு வரும் நேரம் மெதுவாய்..!

நிலவு வரும் நேரம் மெதுவாய்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
புதியதொரு வேகம் பிறக்கும்..!
நினைவில்சுக கதவு திறக்கும்..!

நிலவு வரும் நேரம் மெதுவாய்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
விலகுமெந்தன் நாணம் மனதில்..!

உனது விழி பார்வை படர,
இதழில் புதுக் கவிதை மலர,
எரிமலைகள் வெடித்துச் சிதர,
இதயத்தின் ஓசை அதிர,
இருகரங்கள் பின்னிக் கிடக்கும்..!
இன்பஒலி கதவை உடைக்கும்..!
ஒளிவிளக்கு பார்த்துச் சிரிக்கும்.
உயிருருகி வேர்வை தெரிக்கும்.

நிலவு வரும் நேரம் மெதுவாய்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
புதியதொரு வேகம் பிறக்கும்..!
நினைவில்சுக கதவு திறக்கும்..!

இதுவரையில் காணக் கிடைக்கா,
பேரழகுப் பெண்மை உனக்கு.
ஆடைமட்டும் கண்ட அழகை,
ஆனமட்டும் அள்ளி எடுப்பாய்...
ஆசைஅலை கரையை உடைக்க,
அன்பினிதம் அள்ளிக் கொடுப்பாய்...
காலைவரை காட்சி தொடரும்..!
களைப்போடு நாளை விடியும்..!

நிலவு வரும் நேரம் மெதுவாய்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
விலகுமெந்தன் நாணம் மனதில்,
புதியதொரு வேகம் பிறக்கும்..!
நினைவில்சுக கதவு திறக்கும்..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form