இருட்டுக்குள்ளே மக்கள் எல்லாம் திண்டாட்டம்..!

இருட்டுக்குள்ளே மக்கள் எல்லாம் திண்டாட்டம். - அண்ணன்
இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...
(இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...)
பக்கத்திலே தோழி.
அண்ணன் ரொம்ப ஜாலி.
வாக்கு போட்ட மக்களுக்கு
தூக்கமெல்லாம் காலி. - இப்ப
தூக்கமெல்லாம் காலி. -

இருட்டுக்குள்ளே மக்கள் எல்லாம் திண்டாட்டம் - அண்ணன்
இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...
(ஆமா - கொண்டாட்டம்...)

பண்டிகைக்கு பஸ்சில்லாம
டாப்பில் ஏறி போகுறான்.
கண்டபடி விலையேற்றி
தனியாரு வாழுறான்... - இங்கே
தனியாரு வாழுறான்...
அனியாய ஆட்சியின்னு,
கூட்டமெல்லாம் கூவுது...
தெரியாம வாக்களிச்சு,
திணறி இப்ப சாகுது... - ஜனம்
திணறி இப்ப சாகுது...

இருட்டுக்குள்ளே மக்கள் எல்லாம் திண்டாட்டம் - அண்ணன்
இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...
(இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...)
பக்கத்திலே தோழி.
அண்ணன் ரொம்ப ஜாலி.
வாக்கு போட்ட மக்களுக்கு,
தூக்கமெல்லாம் காலி. - இப்ப
தூக்கமெல்லாம் காலி. -

தீப்பந்தம் கொழுத்தி வச்சி,
தெருவில் நின்னு வாடுரான்... - மக்கள்
தெருவில் நின்னு வாடுறான்...
பொருப்பற்ற போக்கிரியோ,
வெளிநாடு ஓடுறான்...
ஊரான் வீட்டு நெய்யெடுத்து,
ஸ்வீட்டுக் கட போடுறான்... - அத
முட்டுக் கொடுக்க முடியாம,
தற்குறிதிண் டாடுறான்..!
தற்குறிதிண் டாடுறான்..!

இருட்டுக்குள்ளே மக்கள் எல்லாம் திண்டாட்டம் - அண்ணன்
இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...
(இங்கிலாந்தில் ஜாலியாக கொண்டாட்டம்...)
பக்கத்திலே தோழி.
அண்ணன் ரொம்ப ஜாலி.
வாக்கு போட்ட மக்களுக்கு,
தூக்கமெல்லாம் காலி. - இப்ப
தூக்கமெல்லாம் காலி. -

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form