நயமாக ஆடுகிறார் திருமா

நயமாக ஆடுகிறார் திருமா. - இந்த
நாட்டியம் தான் பிறருக்கு வருமா..?
ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று
அழைத்தவரும் இவர்தான்;
அவரோடு ஜோடி சேர்ந்து
பிழைத்தவரும் இவர்தான்... - இன்று

நயமாக ஆடுகிறார் திருமா. - இந்த
நாட்டியம் தான் பிறருக்கு வருமா..?
(நாட்டியம் தான் பிறருக்கு வருமா..?)

சமூக நீதியை சப்ளை செய்யும்
ஹோல்சேல் வியாபாரி இவரு.
மதச்சார்பின்மை டைட்டில் வைத்து
மார்க்கெட் செய்வார் இவரு. - விஜயை
மார்க்கெட் செய்வார் இவரு.
பாஜாகாவின் பிள்ளையைத் தூக்கி,
அம்பேத்காரின் பவுடர் பூசி,
புரட்சி என்னும் சினிமா காட்டும்,
இயக்குனர் திலகம் இவரு. - புதிய
இயக்குனர் திலகம் இவரு...!
அதனால்

நயமாக ஆடுகிறார் திருமா. - இந்த
நாட்டியம் தான் பிறருக்கு வருமா..?
ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று
அழைத்தவரும் இவர்தான்
அவரோடு ஜோடி சேர்ந்து
பிழைத்தவரும் இவர்தான்... - ஒட்டிப்
பிழைத்தவரும் இவர்தான்...

வெற்றி பெறும் வரை மட்டும்
அண்ண னென்று கூறுவார்.
தோல்வி கண்டு விட்டாலோ
எதிர்ப்பக்கம் ஓடுவார்.
கட்சி என்றும் கொள்கை என்றும்
கதைகதையாய் பேசுவார்.
காற்றடிக்கும் திசைபார்த்து
சாமரங்கள் வீசுவார்.
விஜயைவிட அற்புதமாய்
நடனமாடும் வல்லவர்.
அதிகாரம் இருக்கும் வரை
அவர்களுக்கு நல்லவர்.

நயமாக ஆடுகிறார் திருமா. - இந்த
நாட்டியம் தான் பிறருக்கு வருமா..?
ஆர்எஸ்எஸ் பிள்ளை என்று
அழைத்தவரும் இவர்தான்
அவரோடு ஜோடி சேர்ந்து
பிழைத்தவரும் இவர்தான்... - ஒட்டிப்
பிழைத்தவரும் இவர்தான்...

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form