தேரோடும் வீதியிலே... தேவதைய பார்த்தேன்டா‌‌..!

தேரோடும் வீதியிலே...
தேவதைய பார்த்தேன்டா‌‌..!
பேரழக பார்த்ததிலே,
பேயரஞ்சி நின்னேன்டா..!

எதுவும் நகரல - என்
உலகம் சுழலல ..!
ஏதோ நடக்குது,
எதுவும் புரியல..!

தேரோடும் வீதியிலே...
தேவதைய பார்த்தேன்டா..! - என்
தேவதைய பார்த்தேன்டா..!

மின்னலொன்று மேலிருந்து,
இறங்கிவந்து நின்றதுபோல்,
என்னவளின் வடிவழகும்...
ஏங்கவைக்கும் விழியழகும்...
பட்டுத் தாவணிக்குள்,
பட்டாம் பூச்சிஎன,
சிறகடித்து அவள்போக,
சிலிர்க்குதடா எம்மனசு..! - மெல்ல
சிலிர்க்குதடா எம்மனசு..!
எத்தனையோ திருநாளை,
என்வாழ்வில் கண்டிருப்பேன்..!
இந்தஒரு நாளைப்போல்...
எப்போதும் கண்டதில்ல..!
இனிமேலும் காண்பதில்ல..!

தேரோடும் வீதியிலே...
தேவதையப் பார்த்தேன்டா‌‌..!
பேரழக பார்த்ததிலே,
பேயரஞ்சி நின்னேன்டா..! - நான்
பேயரஞ்சி நின்னேன்டா..!

பின்னல் ஜடையழகில்,
பின்னிவிட்டாள் என்னுயிர...
புன்னகையின் சிறைக்குள்ளே,
பூட்டிவிட்டாள் எம்மனச... - மெல்ல
பூட்டிவிட்டாள் எம்மனச...
அலைபாயும் கூந்தலிலே,
அலைக்களிக்கப் பட்டவன்நான்..!
சிலைபோன்ற பேரழகால்,
சிலையாகி விட்டவன்நான்..! - இன்று
சிலையாகி விட்டவன்நான்..!

தேரோடும் வீதியிலே...
தேவதையப் பார்த்தேன்டா‌‌..!
பேரழக பார்த்ததிலே,
பேயரஞ்சி நின்னேன்டா..! - நான்
பேயரஞ்சி நின்னேன்டா..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form