ஓட ஓட வெரட்டுராங்கடா...

ஓட ஓட வெரட்டுராங்கடா... - ஒங்கள
ஓட ஓட வெரட்டுராங்கடா...
கேள்விமேல கேள்விகளக் கேட்டு,
வைக்கிறாங்க மக்கள் குற்றச் சாட்டு.

போலீசு பாதுகாப்பில்,
போனாலும் பயனில்ல...
தற்குறிகள் தைரியமா,
தலைகாட்ட வழியில்ல...

ஓட ஓட வெரட்டுராங்கடா... - ஒங்கள
ஓட ஓட வெரட்டுராங்கடா...

ஓட்டுப் போட்ட மைகாயும் முன்னாலே,
ஓடிப் போன வேட்பாளர் ஒன்னாலே,
யாருக்கென்ன லாபமுன்னு கேக்குறாங்க..!
தாவிப் போன தற்குறிய தாக்குறாங்க..!
அரிசிவெல பருப்புவெல ஏறுதய்யா...
அரசியலோ சாக்கடைபோல் நாறுதையா... - விஜய்
அரசியலோ சாக்கடைபோல் நாறுதையா...

ஓட ஓட வெரட்டுராங்கடா... - ஒங்கள
ஓட ஓட வெரட்டுராங்கடா...
கேள்விமேல கேள்விகளக் கேட்டு,
வைக்கிறாங்க மக்கள் குற்றச் சாட்டு. - இப்ப
வைக்கிறாங்க மக்கள் குற்றச் சாட்டு.

மாற்றமுன்னு சொன்னதெல்லாம் இதுதானா..?
வேட்பாளர் திருடுவது சரிதானா..?
நேற்று - ஒரு - கட்சியில இருந்தவங்க,
ஓட்டுப் போட்ட மக்களையே மறந்தவங்க,
வெக்கங்கெட்டு வாக்குக்கேட்டு வரலாமா..? - இந்த
துரோகிகள ஊருக்குள் விடலாமா..?- என்று

ஓட ஓட வெரட்டுராங்கடா... - ஒங்கள
ஓட ஓட வெரட்டுராங்கடா...
கேள்விமேல கேள்விகளக் கேட்டு,
வைக்கிறாங்க மக்கள் குற்றச் சாட்டு. - இப்ப
வைக்கிறாங்க மக்கள் குற்றச் சாட்டு.

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form